செவ்வாய், 27 நவம்பர், 2012

அலிஃப் என்ற உயிரெழுத்தும் பி.ஜே அவர்களின் பிழைக்கோட்பாடும்


சகோதரர் பி.ஜே அவர்கள் தனது தர்ஜுமாவில் எழுதியது:

இந்த எழுத்துப் பிழைகள் பெரும்பாலும் இந்த அலிஃப் என்ற எழுத்தைச் சுற்றியே அமைந்துள்ளது(பார்க்கதிருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறுபி.ஜே தர்ஜுமா)
சகோ.பி.ஜே அவர்கள் பிழை என்று குறிப்பிட்டவற்றில் பின் வரும் வார்த்தைகள் நமது சிந்தனைக்குட்பட்டதாகும்.

லாமுத் தஃகீத் – கூடுதல் அலிஃபும் அறியாமை வாதமும்.
இணைப்பில் உள்ள படத்தில் உள்ளது சகோ.பி.ஜே அவர்கள் எழுத்துப் பிழைகள் என்று தனது தர்ஜுமாவில் பட்டியலிட்ட குர்ஆன் வார்த்தைகள் ஆகும்.  இந்த அனைத்து வார்த்தைகளுமே லாமுத் தஃகீத் என்று சொல்லக் கூடிய ஸ்திரப் படுத்திக் கூறும் லாம் என்ற எழுத்தைக் கொண்டு ஆரம்பிக்கும் வார்த்தைகள் என்பது கவனிக்கத் தக்கதாகும். உதாரணமாக "இலல்லாஹி" என்பது 'அல்லாஹ்வை நோக்கி' என்று பொருள்படுமானால் அதில் லாம் சேர்த்து “லஇலல்லாஹி” என்று வந்தால் “உறுதியாக அல்லாஹ்வை நோக்கி” என்று பொருள் வரும். அப்படியானால் “குர்ஆனில் இப்படி லாம் வரும் இடங்களில் ஒரு அலிஃப் வருகிறது என்பது எதை விளக்குகிறது? ஒரு காரியத்தை உறுதிப்படுத்திச் சொல்வதற்காக பயன்படுத்தப்படும் -  
“லாம்” என்ற எழுத்தை கூடுதல் அலிஃபுடன் எழுதுவது அன்றைய எழுத்துமுறையாக இருந்தது என்பதைத்தானே? இதைப் புரிந்துகொள்ளாமல் சகோ.பி.ஜே அவர்கள் குர்ஆனில் பிழை என்று கூறுவது அறியாமை வாமல்லவா?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.