செவ்வாய், 2 ஜூலை, 2013

ஸஹாபாக்களின் விளக்கத்துக்கு மாற்றமாக தன்னிஷ்ட விளக்கம் நரகத்தின் வழியாகும். – பி.ஜே

தடம் புரண்ட தடயங்கள் - 2

ஸஹாபாக்களின் விளக்கத்துக்கு மாற்றமாக தன்னிஷ்ட விளக்கம் நரகத்தின் வழியாகும். – பி.ஜே

என்ன ஆச்சர்யமாக உள்ளதா? பி.ஜே இப்படிச் சொன்னாரா? ஆம் சாட்சாத் பி.ஜே தான் இப்படிச் சொன்னார். எழுதினார்! எங்கே? எப்போது?
.
1986 கோட்டரரில் சத்திய முழக்கம் என்ற பெயரில் நடந்த முனாழரா (விவாதம்). சுன்னத் ஜமாஅத் என்று சொல்லி; கொண்டு அவ்லியாக்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பதற்கு குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டி தன்னிஷ்ட விளக்கம் தந்தார் குறாஃபித் தலைவர் கேரளாவைச் சேர்ந்த காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார்! அவரது உரை எழுத்து வடிவிலான போது அதற்கு பி.ஜே தந்த விளக்கக் குறிப்பு:

“(வல் முதப்பிராத்தி அம்ரா என்ற வசனத்திற்கு) பெரும் பெரும் ஸஹாபாக்களும் எல்லா முபஸ்ஸிரீன்களும் அதற்கு, மலக்குகள் என்று பொருள் செய்திருக்க, இந்த முசுலியார் தன்னிஷ்டத்துக்குப் புது விளக்கம் தந்து நரகத்திற்கு அழைத்துச் செல்லும் காரியத்தைச் செய்துள்ளார். இந்த விளக்கம் அல்லாஹ் சொன்னதா? அல்லாஹ்வின் தூதர் சொன்னதா? ஸஹாபாக்கள் சொன்னதா? இல்லை; இல்லை, இல்லவே இல்லை.” (கோட்டாரில் சத்திய முழக்கம் 1986 – அந்நஜாத் வெளியீடு)

இப்போது சொல்லுங்கள் தடம் புரண்டது யார்? எந்த தடயங்கள் தடம் புரண்டன?