செவ்வாய், 13 நவம்பர், 2012

எழுத்துப் பிழையையும் எழுத்து முறையையும் பிரித்தறிய இயலாத அறியாமை!

நாகரீகத்தின் வளர்ச்சிக்கேற்ப மக்களின் மொழி வழக்கிலும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன. இது அனைவரும் அறிந்த ஓர் உண்மையாகும். அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு குர்ஆன் அது அருளப்பட்ட மொழி வழக்கிலேயே ஓதப்படுவதும் அந்த நிலையிலேயே அது ஏட்டளவில் பாதுகாக்கப்படுவதும் குர்ஆனிய மொழி இன்றளவும் உயிரோட்டத்துடன் இருப்பதும் அதன் இறைமைத் தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.  
 
குர்ஆனுடைய எழுத்துரு உஸ்மானிய எழுத்துரு எனப்படுகிறது. அந்த வழக்கிலேயே இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அரபு மொழியின் வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டபோது பிற்காலத்தில் படிப்பதற்கு ஏற்றவாறு புள்ளிகளும் குறியீடுகளும் இடப்பட்டதே ஒழிய அதன் முறைமையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.  பி்ந்தைய தலைமுறையின் எழுத்து முறையை ஒப்பிட்டு முன்னோர்களின் எழுத்தில் பிழை உள்ளது என்பது ஓர் அறியாமை வாதம் மட்டுமே.
 
பழய எழுத்து முறையைக் காட்டும் தமிழ் கல்வெட்டு
 
தமிழ் மொழியில் கண்டெடுக்கப்பட்ட பழய கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களை இன்று தமிழர்களாகிய நம்மால் படிக்க இயலாது. அன்றைய எழுத்தும் இன்றைய எழுத்தும் உரு மாறி முற்றிலும் வேறுபட்டதாக ஆகிவிட்டது. ஏன்? சற்று முந்தைய தலை முறை வரை லை ளை ழை னை ணை என்பதை எழுத முறையே ஆகிய எழுத்துக்களுக்கு முன்னால் ஒரு தும்பிக்கை போன்ற சுழி இடப்படும். இப்போது அவ்வழக்கு மாறிவிட்டது.
இதைப் பார்த்து ஒருவர் முன்னோர்கள் எழுதியது தவறு, இன்று நாம் எழுதுவதுதான் சரி என்று வாதிட்டால் அது ஓர் அறியாமை வாதமாகும். இது போன்றதொரு வாதம்தான் குர்ஆன் விஷயத்திலும் கூறப்படுகிறது என்பதே உண்மை. அவை இன்ஷா அல்லாஹ் உதாரணங்களுடன் விளக்கப்படும்.
 
 
இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில்... எழுத்தின் மரபைக் குறித்த அறியாமை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.