வியாழன், 7 மார்ச், 2013

பாதை மாறிய பயணங்கள்

ஒவ்வொரு இடைவெளிக்குப் பின்னரும் கொண்டிருந்த கொள்கையில் மாற்றம் செய்து புதிய பரிணாமம் எடுத்து இஸ்லாமின் அடிப்படையை விட்டு பாதை மாறிக் கொண்டிருக்கும் ததஜ மற்றும் அதன் தலைவரின் பாதை மாறும் பயணங்களுக்கு இன்னொரு சான்று கீழ் விவரிக்கப் படும் செய்தி. தமிழக முஸ்லிம்கள் இந்த ஃபித்னாக்களை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.நேர்வழியில் நடத்த அல்லாஹ் போதுமானவன்.

அஸ்ஸலாமு அலைக்கும்

ஷிர்க்/குஃப்ர் ஆகியவற்றுக்கு எதிராக அனைத்து இயக்கங்களும் (தப்லீக், தவ்ஹீத்) ஒன்றினைந்து குரல் கொடுக்க வேண்டும் என பல தளங்களிலும் குரல் எதிரொலிக்கிறது.ஆனால் இவர்கள் எல்லாம் வசதியாக ஒன்றை மறக்கின்றனர். அதாவது நம்முடைய தவ்ஹீதிகளைப் பொறுத்து ஷிர்க்/குஃப்ர் என்பதெல்லாம் மாறிக்கொண்டே இருக்கும்.

உதாரணமாக, 2003ம் ஆண்டு வரை உண்மை என்றும் ஸஹீஹான ஹஹீஸ் என்றும் சொல்லப்பட்டு வந்த கண் திருஷ்டி இப்போது ஷிர்க் ஆகிவிட்டது. 2012ம் ஆண்டு நிலைப்பாட்டின் படி நீங்கள் கண் திருஷ்டி உண்டு என நம்பினால் ஷிர்க் செய்கின்றீர்கள் என்பது தவ்ஹீதிகளின் நிலை. ததஜவின் விளக்கம் கிடைத்த பிறகும் நீங்கள் கண் திருஷ்டியையும் அது சம்பந்தமாக புஹாரியில் பதிவான ஹதீஸையும் நீங்கள் மெய்பித்தால், நீங்கள் முஸ்லிமே அல்ல என்பது தவ்ஹீதிகளின் இன்றைய நிலைப்பாடு. ஏனெனில் 2003 க்கு பிந்தைய ஒரு ஆண்டில் ததஜ உலமாக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த்து நடத்திய ஒரு ஆய்வில், அது ஷிர்க் ஆகிவிட்டது. இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் மற்ற இமாம்கள், ஸஹாபாக்கள், தாபியீன்கள் யாருக்கும் இந்த ஷிர்க் பற்றிய ஞானம் இல்லையென்பதும், இந்த ஷிர்க் சென்னை மண்ணடியில் வைத்து ஹிஜிரி 15ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் கூடுதல் தகவல்.

எப்படியெல்லாம் ஈமானின் அடிப்படைகளும், ஷிர்க்/குஃப்ரும் பரிணாம வளார்சி பெறும் என்பதை அறிந்துகொள்ள:

ஏப்ரல் 2003:
//கண் திருஷ்டி உண்மை என்று பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அல்குர்ஆன் 9:51 வசனத்திற்கு முரண்படுவதாகக் கூறி இந்த ஹதீஸ்கள் அனைத்தையும் நிராகரிக்க முடியாது. இரண்டையும் இணைத்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும். // (ஆதாரம்: ஏகத்துவம் ஏப்ரல் 2003; பார்க்க: http://onlinepj.com/egathuvam/2003-ega/ega_apr_2003/)

பிப்ரவரி 2010:
// கண் திஷ்டி பற்றிய ஹதீஸ்கள் குறித்து அது குர் ஆனுக்கு முரணாக உள்ளது என்றும் நடைமுறைக்கு முரணாக உள்ளது என்றும் பல்வேறூ விமர்சனங்கள் வந்த நிலையில் இது குறித்து தவ்ஹீத் அறிஞரகள் கலந்து கொண்ட கலந்தாய்வு நடைபெற்றது. இது குறித்து விரைவில் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்படும்// (ஆதாரம்:http://www.onlinepj.com/YQuestion/c_37/ [SR-NO:3022]

ஆகஸ்டு 2010:
இது தான் இப்போதைய நிலைப்பாடு. அதாவ்து கண் துருஷ்டி உண்டு என நம்புவது அல்லாஹ்விற்கு ஷிர்க் வைப்பதாகும். நீங்கள் இந்த வீடியோ விளக்கம் சென்றடைந்த பிறகும் கண் திருஷியையும், ஸஹீஹைனில் பதிவான ஹதீஸையும் நம்பினால் நீங்கள் முஷ்ரிக். ஏனெனில் ததஜ உலமாக்கள் எல்லாம் கூடிய கூட்டம் ஒன்றில் அது ஷிர்க் என முடிவாகிவிட்டது (பார்க்க: http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/kanthirushti_unda/ )

சகோதரர்களே, வேதனையாக உள்ளது இந்த தவ்ஹீதிகளின் “தவ்ஹீதை” பார்க்கும் போது. ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால், இவர்கள் பின்பற்றுவது குரானும் அல்ல சுன்னாவும் அல்ல. இவர்கள் தவ்ஹீதிகளும் அல்லர். என்னைப் பொறுத்து பீஜே என்பவர் ஈ.வெ.ரா பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளால் குறிப்பிடத்தக்க அளவு உந்தப்பட்டவர் (முழுமையாக இல்லாவிட்டாலும்). அல்லாஹ் இந்த வழிகெட்ட கூட்டத்தின் தீங்கைவிட்டு நம்மை பாதுகாக்க வேண்டும். இந்த வழிகெட்ட கூட்டம், தவ்ஹீத்/சீர்திருத்தம் தான் செய்கிறார்கள் என யாரவது நினைத்தால், தயவு செய்து அந்த எண்ணத்தை தூக்கி எறிந்து விடுங்கள்.

இது ஏதோ வரலை ஆட்டுவது, நெஞ்சில் கை வப்பது போன்ற ஃபிக்ஹ் பிரச்சினை அல்ல. மாறாக அவர்கள் இடித்து கொண்டிருப்பது மார்க்கத்தின் அஸ்திவாரத்தை. மீண்டும் சொல்கிறேன் ‘நீங்கள் அவர்களின் விளக்கம் கிடைத்த பிறகும் கன் திருஷ்டியையும் அது சம்பந்தமான புஹாரி உள்ளிட்ட நூல்களில் பதிவான ஹதீஸ்களையும் உண்மை படுத்தினால் நீங்கள் ததஜவைப் பொறுத்து முஸ்லிமே அல்ல’.

யா அல்லாஹ்! உள்ளம் உன்மையிலேயே கணக்கிறது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.