திங்கள், 5 நவம்பர், 2012

குர்ஆனின் எழுத்துக் கலையும் அறியாமை வாதங்களும்.

குர்ஆனில் சில எழுத்துப் பிழைகள் என்று சகோ.பி.ஜே மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களால் செய்யப்படும் பிரச்சாரம் அதன் எழுத்துக் கலை குறித்த அறியாமையிலிருந்து உருவாகியுள்ளதைக் கண்டு வருகிறோம்.  குர்ஆனின் ஓதுதற்கலையையோ எழுத்துக்கலையையோ இவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் சமீபத்தில் இவர்கள் விவாதித்தலிருந்து நாம் அறிந்து கொண்டது.

 புராதன அரபு மொழி எழுத்தின் கலைக்கு குர்ஆன் ஓர் அற்புத எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இலக்கண இலக்கியங்களையெல்லாம் விஞ்சி இறைவேதத்திற்கே உரிய மிடுக்குடன் மாறுதலின்றி தனித்து விளங்கும் அற்புத வேதம் குர்ஆன்.

 குர்ஆனின் எழுத்துக்கலைகள் குறித்து பல்வேறு கால கட்டங்களில் பல அறிஞர்களும் எழுதிய புத்தகங்கள் உள்ளன. குர்ஆனிய எழுத்துக்கலை என்பது ஒரு கடல். அதில் குறை காண்பது என்பது சிறுமைத் தனம் ஆகும்.

 குர்ஆனில் எழுத்துப் பிழைகள் என்று சகோ.பி.ஜே அவர்கள் முன்வைத்தவை எழுத்துப்பிழைகள் அல்ல என்றும் அது குறித்து அவர் அறியாமையில் இருக்கிறார் என்பதும் பல்வேறு மார்க்க அறிஞர்களால் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

குர்ஆனில் பிழைகள் என்று சகோ. பி.ஜே அவர்கள் பட்டியலிட்டதையும் குர்ஆனின் எழுத்துக் கலைப்படி அவை பிழைகள் அல்ல என்பதையும் இன்ஷா அல்லாஹ் இந்த ஆய்வுக் கட்டுரையில தொடராகக் காண்போம்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.