ஞாயிறு, 18 நவம்பர், 2012

எழுத்தின் மரபைக் குறித்த அறியாமை

ரபு மொழியின் இன்றைய எழுத்து முறைக்கும் குர்ஆனிய எழுத்து முறைக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.  அதன் காரணமாகவே இன்ன பிற அரபுப் புத்தகங்கள் பத்திரிக்கைகள் அச்சிடப்படுவதைப் போல குர்ஆனை அச்சிடுவதற்கு கணினி அச்சுக் கோர்வை பயன்படுத்தப்படுவதில்லை.  இதை அறியாத சகோதரர் பி.ஜே அவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் குர்ஆனில் எழுத்துப் பிழைகள் என்று ஒரு பட்டியலைத் தந்துள்ளார்.  ஆனால் அவரது வாதப் படி அவை பிழை என்றிருப்பின் குர்ஆனுடைய ஒவ்வொரு அத்தியாயத்திலும் பிழைகள் என்று நூற்றுக் கணக்கான வார்த்தைகளைப் பட்டியலிட முடியும்.
ஆனால் நிஜாமுத்தீன் மன்பஈ குர்ஆனின் எழுத்து முறை என்று கூறியதை எழுத்துப் பிழையாக்கி மறுபதிவு செய்ததிலிருந்தே சகோதரர் பி.ஜே அவர்களின் அறியாமை வெளிப்படுகிறது.

அலிஃபின் தன்மையும் அறியாமை வாதமும்.
சகோதரர் பி.ஜே அவர்கள் குர்ஆனில் எழுத்துப் பிழைகள் என்று தலைப்பிட்டு அதைப் பற்றிக் குறிப்பிடும்போது “இந்த எழுத்துப் பிழைகள் பெரும்பாலும் இந்த அலிஃப் என்ற எழுத்தைச் சுற்றியே அமைந்துள்ளது என்று பதிவு செய்திருக்கிறார். (பார்க்க – திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு – பி.ஜே தர்ஜுமா)
அரபு மொழியில் "அலிஃப்" "யா" மற்றும் "வா" (ا و ي) ஆகிய எழுத்துக்கள்  உயிரெழுத்துக்களாகும். சில இடங்களில் இவை இணைந்து வரும்போது எழுத்தில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அலிஃப் வரும் சில இடங்களில் மொழியின் தேவைக்கேற்ப மாற்றங்கள் ஏற்படும் என்பது அரபு மொழி அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட விசயம் ஆகும். இதை உதாரணத்துடன் விளக்க வேண்டுமானால் அன, ஹாதா, தாலிக போன்ற வார்த்தைகளைக் குறிப்பிடலாம். இதில் அன என்பது அனா என்று ஒரு அலிஃப் கூடுதலுடன் எழுதப்படுகிறது. ஹாதா தாலிக போன்ற வார்த்தைகளில் அலிஃப் எழுதப்படுவதில்லை. ஆனால் வாசிக்கப்படும். குர்ஆனில் ரஹ்மான் என்ற வார்த்தை அலிஃப் இல்லாமல் எழுதப்பட்டுள்ளது. இதுபோன்ற நிறைய வார்த்தைகள்.
ஏன் அலிஃப் என்ற ஓர் எழுத்தில் மட்டும் குர்ஆனில் ஆங்காங்கே மாற்றம் ஏற்பட வேண்டும்?  பிழை என்றால் எல்லா எழுத்துக்களிலும் அல்லவா பிழை ஏற்பட்டிருக்க வேண்டும்?   இதைக் கருத்தில் கொண்டாலே அலிஃபின் கூடுதலை அல்லது குறைவை பிழை என்று வாதிட்ட பி.ஜே அவர்கள் அதன் எழுத்து முறைமை பற்றி அறியாமல் இருந்திருக்கிறார் என்ற உண்மையை விளங்க முடியும்.
 
இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில்து சகோதரர் பி.ஜே அவர்கள் பிழைகள் என்று கொடுத்த பட்டியலைப் பார்ப்போம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.