புதன், 21 செப்டம்பர், 2011

ஸலஃபுக் கொள்கையும் பி.ஜே அவர்களின் பழய நிலைபாடும்!

கத்துவ எழுச்சியின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் நம்முடைய நல்லறிஞர்கள் எந்த கொள்கையில் நிலை கொண்டிருந்தார்களோ அதில் சகோ.பி.ஜே நின்றார். குர்ஆன் சுன்னா விஷயத்தில் ஸலஃபுகள் எங்கு நிறுத்தினார்களோ அங்கு நிறுத்த வேண்டும் என்ற உன்னத நிலைபாட்டின் அடிப்படையில் நமது பிரச்சாரம் அமைந்திருந்தது. குர்ஆன் சுன்னாவிலிருந்து ஸலஃபுகளைப் பிரிக்க முடியாது என்பதால் அது பிரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் அன்று ஏற்படவில்லை. ஆனால் பிற்காலத்தில் பி.ஜே அவர்கள் இந்த நிலைபாட்டிலிருந்து படிப்படியாகத் தடம் புரண்டதுடன் புதிய புதிய கொள்கைகளை குர்ஆன் சுன்னாவின் பெயரால் அறிமுகம் செய்தார். அது மக்கள் மத்தியில் எடுபடுவதற்காக ஸலஃபுகள் அளித்த விளக்கத்தை ஏற்க வேண்டும் என்றவர்களை மூன்றாவது அடிப்படையை ஏற்படுத்தியவர்கள் என்று சகட்டு மேனிக்கு விமர்சித்தார். குர்ஆன் சுன்னா என்று சொல்லிக் கொண்டே ஸஹீஹான ஹதீஸ்களை தனது அறிவுக்கு ஒத்து வராத காரணத்தால் நிராகரித்தார்.  சில ஹதீஸ்களுக்கு சுயமாக பொருந்தா விளக்கமளித்தார்.  பி.ஜே அவர்களின் இந்த நிலைபாடு நம்முடைய அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டபோது எதிர் தரப்பினரை ஸஹாபாக்களைப் பின்பற்றுபவர்கள் என்றும் அது கெட்ட கொள்கை என்றும் விமர்சித்து வருகிறார். அது மட்டுமனிறி 20 வருடமாக தான் இந்த நிலைபாட்டில் இருப்பதாகவும் தன்னுடைய எதிர் தரப்பினர்தான் புதிய நிலைபாட்டை எடுத்தவர்கள் என்றும் குற்றம் சாட்டி வருகிறார். இவரைக் கண்மூடிப் பின்பற்றும் ஆதரவாளர்களும் உண்மை என்னவென்று ஆராயாமல் இதை அப்படியே பரபப்பி வருகின்றனர்.  ஆனாலும் உண்மை அவ்வாறல்ல. ஆரம்ப காலத்தில் ஸலஃபுகளின் விளக்கம் மார்க்கத்தின் முக்கிய அம்சம் என்ற நிலைபாட்டில்தான் பி.ஜே இருந்தார் என்பதற்கு அவரது எழுத்துக்கள் மற்றும் பேச்சிலிருந்து சில ஆதாரங்களை இப்பதிவின் மூலம் மக்கள் மன்றத்தில் வைக்க ஆசைப்படுகிறோம்.  அல்லாஹ்வின் உதவியால் சிலரேனும் இதைக் கொண்டு சிந்தித்து சத்தியக் கொள்கையின் பக்கம் வரலாம் என்று ஆதரவு வைக்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு உதவி செய்வானாக.

திங்கள், 31 ஜனவரி, 2011

மவ்லவி.பி.ஜே அவர்களின் கொள்கை மாற்றம் - ஓர் எளிய உரையாடல்!

Mohammad Sheik:கேள்வி 4: சகோ.பீஜே ஜாக் எனும் அமைப்பில் இருக்கும் போது சலஃப் மன்ஹஜை பின்பற்றுவது தான் சரி என்று அல்ஜன்னத் மாத இதழில் எழுதி வந்தாரா அல்லது குர்ஆனும் நபிமொழியிம் மட்டுமே பின்பற்றத் தகுதியானவை என்று எழுதி வந்தாரா? (பழைய அல்ஜன்னத்தின் கடைசிப் பக்கத்தில் சபதம் ஏற்போம்என்று வரும் அதிலே என்ன சொல்லப்பட்டிருந்தது?

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சி! அன்றும் இன்றும்!

தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சி! அன்றும் இன்றும்!

Mohammed Sheik: சகோ. முஹம்மது அபூபக்க்ர் ஆலு அப்தில்லாஹ்விற்க்கான பதில் 1

பதில்: ங்கே பிரச்சினையில்  மூலக் கருவிலிருந்து திசை திருப்ப முதலில் யார் பிரச்சாரம் செய்தார், நானா நீயா? என்ற அடிப்படையில் வேறு திசைக்குக் கொண்டு செல்ல முயற்சி நடைபெற்றிருக்கிறது. தமிழகத்தில் தஹ்ஹீத் பிரச்சாரகர்களில் ஒருவராக இருந்த சகோ. பி.ஜே காலப் போக்கில் உண்மையான கொள்கையில் இருந்து தடம் புரண்டவர்!  இன்று அவரும் அவர் காலப்போக்கில் கண்ட இயக்கங்களுடன் சஞ்சரித்து இன்று ததஜ என்ற இயக்கத்தில் இருப்பவர்களும் ஆரம்ப காலத்தில் எந்த ஒரு கொள்கையில் ஏகத்துவம் பிரச்சாரம் செய்யப்பட்டதோ அந்த கொள்கையிலிருந்து தடம் புரண்டு சென்றார்கள் என்பதற்காகவே ஏகத்துவப் பிரச்சாரத்தைப் பற்றிய சில வராலற்றுச் செய்திகளைப் பதிந்தேன். அவற்றை இருட்டடிப்பு என்று கூறி கருத்துப் பதிவு செய்துள்ளார் சகோ. முஹம்மது ஷேக்!