செவ்வாய், 27 நவம்பர், 2012

அலிஃப் என்ற உயிரெழுத்தும் பி.ஜே அவர்களின் பிழைக்கோட்பாடும்


சகோதரர் பி.ஜே அவர்கள் தனது தர்ஜுமாவில் எழுதியது:

இந்த எழுத்துப் பிழைகள் பெரும்பாலும் இந்த அலிஃப் என்ற எழுத்தைச் சுற்றியே அமைந்துள்ளது(பார்க்கதிருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறுபி.ஜே தர்ஜுமா)
சகோ.பி.ஜே அவர்கள் பிழை என்று குறிப்பிட்டவற்றில் பின் வரும் வார்த்தைகள் நமது சிந்தனைக்குட்பட்டதாகும்.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

தவ்ஹீத் ஜமாஅத்திடம் விவாதிக்கத் தயாரா?

பி.ஜே மற்றும் ததஜ வினர் நாங்கள் தான் விவாதம் செய்பவர்கள், மற்றவர்கள் எங்களை விட்டும் விரண்டோடி விடுவார்கள் என்ற ஒரு மாயையை இன்னும் தொடர்ந்து காட்டி வருகிறார்கள். சமீபத்தில் பெங்களூர் DIET குழுவினரைடன் விவாதம் என்று ஒப்பந்தம் போட்டு விவாதம் நடக்காமல் இருக்க எல்லா வழிமுறைகளையும் கையாண்டு கடைசியில் அவர்கள் ஓட்டம் எடுத்தார்கள் என்று ஆன்லைப் பி.ஜே இணைய தளத்தில் ஓட விட்டார்கள். அதன் உண்மை நிலையை விளக்கி DIET சகோதரர்கள் விளக்கமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இதில் ததஜ வின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகிறது. அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய அருமையான ஒளிப்படம்.

ஞாயிறு, 18 நவம்பர், 2012

எழுத்தின் மரபைக் குறித்த அறியாமை

ரபு மொழியின் இன்றைய எழுத்து முறைக்கும் குர்ஆனிய எழுத்து முறைக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.  அதன் காரணமாகவே இன்ன பிற அரபுப் புத்தகங்கள் பத்திரிக்கைகள் அச்சிடப்படுவதைப் போல குர்ஆனை அச்சிடுவதற்கு கணினி அச்சுக் கோர்வை பயன்படுத்தப்படுவதில்லை.  இதை அறியாத சகோதரர் பி.ஜே அவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் குர்ஆனில் எழுத்துப் பிழைகள் என்று ஒரு பட்டியலைத் தந்துள்ளார்.  ஆனால் அவரது வாதப் படி அவை பிழை என்றிருப்பின் குர்ஆனுடைய ஒவ்வொரு அத்தியாயத்திலும் பிழைகள் என்று நூற்றுக் கணக்கான வார்த்தைகளைப் பட்டியலிட முடியும்.
ஆனால் நிஜாமுத்தீன் மன்பஈ குர்ஆனின் எழுத்து முறை என்று கூறியதை எழுத்துப் பிழையாக்கி மறுபதிவு செய்ததிலிருந்தே சகோதரர் பி.ஜே அவர்களின் அறியாமை வெளிப்படுகிறது.

செவ்வாய், 13 நவம்பர், 2012

எழுத்துப் பிழையையும் எழுத்து முறையையும் பிரித்தறிய இயலாத அறியாமை!

நாகரீகத்தின் வளர்ச்சிக்கேற்ப மக்களின் மொழி வழக்கிலும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன. இது அனைவரும் அறிந்த ஓர் உண்மையாகும். அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு குர்ஆன் அது அருளப்பட்ட மொழி வழக்கிலேயே ஓதப்படுவதும் அந்த நிலையிலேயே அது ஏட்டளவில் பாதுகாக்கப்படுவதும் குர்ஆனிய மொழி இன்றளவும் உயிரோட்டத்துடன் இருப்பதும் அதன் இறைமைத் தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.  

திங்கள், 12 நவம்பர், 2012

குர்ஆன் தொகுப்பில் நபித்தோழர்கள் ஆற்றிய அரும்பணி

ஸைத் பின் ஃதாபித் (ரழி) அறிவிக்கின்றார்கள்:  (ஹதீஸ் சுருக்கப்பட்டுள்ளது)

 ...(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) '(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக 'வஹீ' (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்'' என்று கூறினார்கள்.

வியாழன், 8 நவம்பர், 2012

ஓசை வடிவம் மட்டும்தான் பாதுகாக்கப்பட்டதா?

ன்று குர்ஆனில் எழுத்துப் பிழை என்று வாதிடும் சகோ.பி.ஜே அவர்கள் குர்ஆனை அல்லாஹ் ஓசை வடிவில்தான் பாதுகாத்தான் என்று கூறி அதன் எழுத்து வடிவத்தைக் கொச்சைப் படுத்தியும் அதில் பிழை உள்ளது என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்தே குர்ஆனை எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட அதன் கண்ணியத்தின் மீது ஏற்படுத்தும் ஒரு களங்கமாகும்.

திங்கள், 5 நவம்பர், 2012

குர்ஆனின் எழுத்துக் கலையும் அறியாமை வாதங்களும்.

குர்ஆனில் சில எழுத்துப் பிழைகள் என்று சகோ.பி.ஜே மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களால் செய்யப்படும் பிரச்சாரம் அதன் எழுத்துக் கலை குறித்த அறியாமையிலிருந்து உருவாகியுள்ளதைக் கண்டு வருகிறோம்.  குர்ஆனின் ஓதுதற்கலையையோ எழுத்துக்கலையையோ இவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் சமீபத்தில் இவர்கள் விவாதித்தலிருந்து நாம் அறிந்து கொண்டது.

 புராதன அரபு மொழி எழுத்தின் கலைக்கு குர்ஆன் ஓர் அற்புத எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இலக்கண இலக்கியங்களையெல்லாம் விஞ்சி இறைவேதத்திற்கே உரிய மிடுக்குடன் மாறுதலின்றி தனித்து விளங்கும் அற்புத வேதம் குர்ஆன்.

 குர்ஆனின் எழுத்துக்கலைகள் குறித்து பல்வேறு கால கட்டங்களில் பல அறிஞர்களும் எழுதிய புத்தகங்கள் உள்ளன. குர்ஆனிய எழுத்துக்கலை என்பது ஒரு கடல். அதில் குறை காண்பது என்பது சிறுமைத் தனம் ஆகும்.

 குர்ஆனில் எழுத்துப் பிழைகள் என்று சகோ.பி.ஜே அவர்கள் முன்வைத்தவை எழுத்துப்பிழைகள் அல்ல என்றும் அது குறித்து அவர் அறியாமையில் இருக்கிறார் என்பதும் பல்வேறு மார்க்க அறிஞர்களால் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

குர்ஆனில் பிழைகள் என்று சகோ. பி.ஜே அவர்கள் பட்டியலிட்டதையும் குர்ஆனின் எழுத்துக் கலைப்படி அவை பிழைகள் அல்ல என்பதையும் இன்ஷா அல்லாஹ் இந்த ஆய்வுக் கட்டுரையில தொடராகக் காண்போம்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...