திங்கள், 27 டிசம்பர், 2010

ஸலஃப் மன்ஹஜ் - விமர்சனங்களும் பதில்களும்! (3)

Mohammad Sheik:  உங்களின் ஆக்கங்களில் இருந்து கேள்விகளை கேட்கிறேன். 


கேள்வி1: ஜாக் அமைப்பு தான் தமிழகத்தின் முதல் ஏகத்துவப் பிரச்சார அமைப்பா?
முதலில் தமிழகத்தில் (1980s) ஏகத்துவப் பிரச்சாரத்தினை துவக்கியது கமாலுத்தீன் மதனி மற்றும் இக்பால் மதனி மட்டுமேவா?

Muhammed Aal Abdillah:  என்னுடைய முதல் ஆக்கத்திலேயே உங்கள் கேள்வி:1 க்கான பதில் உள்ளது. நீங்கள் ஒரு பகுதியை அறுத்தெடுத்து பதில் இருக்கும்போதே கேள்வி கேட்டதன் நோக்கம் என்ன? என்று புரியவில்லை.

நான் எழுதியது://கேரளாவில் முஜாஹித்இலங்கையில் ஜம்இய்யத்து அன்சார் சுன்னா முஹம்மதிய்யா போன்ற அமைப்புகள். தமிழ் நாட்டில் அஹ்லெ ஹதீஸ் பெயரளவுக்கு இருந்தாலும் அந்த அளவுக்கு செயல்பாடு இல்லாமல் இருந்தது. இந்த நிலையில்தான் மதீனாவிலிருந்து இஸ்லாமியக் கல்வி பயின்று வந்த கமாலுத்தீன் மதனி, இக்பால் மதனி போன்ற பெரியவர்கள் தங்களது எளிய முயற்சியால் தமிழகத்தில் இந்த பிரச்சாரத்தை முடுக்கி விடும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களோடு சேர்ந்து கொண்டவர்தான் இன்று ததஜ வில் இருக்குமு; பி.ஜே எனப்படும் பி. ஜைனுல் ஆபிதீன். பி.ஜைனுல் ஆபிதீன் மிகுந்த பேச்சுத் திறன் கொண்டவராதலால் ஆலிம்கள் அவரைப் பயன்படுத்திக் கொண்டனர். ஆரம்பத்தில் இருந்த உலமாக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏகத்துவப் பிரச்சாரம் செய்ய ஒருங்கிணைந்த ஓர் அமைப்பு தேவை என்று முடிவு செய்து ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (குர்ஆன் மற்றும் ஹதீஸைப் பின்பற்றுபவர்களின் கூட்டமைப்பு) என்ற அமைப்பு அல்லாஹ்வின் பேரருளால் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இஸ்லாமிய இறைப் பணி இயக்கமும் இந்த இயக்கத்துடன் சங்கமித்தது. நமதூரில் ஜமாஅத்தே இஸ்லாமியுடன் இணைந்து செயல்பட்ட மக்களும் இந்த அமைப்புடன் சங்கமித்தனர். அல்ஜன்னத், அந்நஜாத், புரட்சி மின்னல் போன்ற இதழ்கள் நம்மவர்களுக்கு அறிவுச்சுடரை ஏந்தி வந்து கொண்டிருந்தது//

இது தவறான கருத்து என்றால் உண்மை எது என்று எழுதுங்களேன்?

Mohammad Sheik:  கேள்வி 2: //இந்நிலையில் தான் சகோ.பி.ஜைனுல் ஆபிதீனின் போக்கில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. அது என்ன மாற்றம்   என்ன மாற்றம் ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது?

Muhammed Aal Abdillah: என்ன மாற்றம் என்பதை என்னுடைய பதிவுகளில் ஆங்காங்கே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேனே? முதலில் அதனை முழுமையாகப் படியுங்கள்.

Mohammad Sheik:  கேள்வி 3: ஒருவர் ஆரம்பத்தில் ஒரு கொள்கையில் இருந்திருக்கலாம், பின்னர் அவருக்கு தெளிவுக் கிடைத்தால் அந்தக் கொள்கையை தவறு என்று பிரச்சாரம் செய்வது தவறா?

Muhammed Aal Abdillah: தவறல்ல! கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டாக உள்ளது என்பதைத்தான் தவறு என்கிறோம். ஸலஃப் மன்ஹஜை உடையவர்கள் வழிகெட்டவர்கள் என்று ஸக்காத் விஷயத்தில் புதிய நிலைபாடு எடுத்த பின்னர் இல்லாத அவதூறை (குர்ஆன் ஹதீசுக்கு எதிராக ஸஹாபாக்களைப் பின்பற்றுகிறார்கள்) என்று தன் கருத்தை நிலைநாட்ட அவர் சொன்னாரே தவிர தெளிவு ஏற்பட்டுச் சொல்லவில்லை என்கிறோம். ஒரு வாதத்துக்காக அப்படி சொன்னார் என்று வைத்துக் கொள்வோம்! உங்கள் வாதப்படி அவருக்கு இப்போதுதான் (அதாவது கடந்த சில வருடங்களுக்கு முன்) தெளிவு கிடைத்துள்ளது. அப்படியானால் 20 வருடமாக இதைத்தான் நாங்கள் சொல்லி வருகிறோம் என்று அவர் சொன்னது பொய்தானே?

Mohammad Sheik:கேள்வி 4: சகோ.பீஜே ஜாக் எனும் அமைப்பில் இருக்கும் போது சலஃப் மன்ஹஜை பின்பற்றுவது தான் சரி என்று அல்ஜன்னத் மாத இதழில் எழுதி வந்தாரா அல்லது குர்ஆனும் நபிமொழியிம் மட்டுமே பின்பற்றத் தகுதியானவை என்று எழுதி வந்தாரா? (பழைய அல்ஜன்னத்தின் கடைசிப் பக்கத்தில் சபதம் ஏற்போம்என்று வரும் அதிலே என்ன சொல்லப்பட்டிருந்தது?

Muhammed Aal Abdillah:  இந்தக் கேள்விக்கும் என்னுடைய பதிவில் விளக்கியிருக்கிறேன் சகோதரரே! இருந்தாலும் உங்களுக்காக சுருக்கமாகப் பதிகிறேன். அல்ஜன்னத்தில் மட்டுமல்ல! அந்நஜாத், புரட்சிமின்னல் போன்ற இதழ்களில் கூட அவர் எழுதியதும் பேசியதும் உண்டு. அதுவும் ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டே பேசியிருக்கிறார். குர்ஆனையும் நபிவழியையும் ஜமாஅத்துஸ்ஸஹாபாவையும் பின்பற்றுவதுதான் உண்மையான அஹ்லுஸ்சுன்னத் வல்ஜமாஅத் என்று ஹதீசை ஆதாரம் காட்டிப் பேசியதும் அவர்தான்.

அப்படியானால் சபதம் ஏற்போம் என்று அல்ஜன்னத்தில் எழுதப்பட்டது ஏன்? என்று நீங்கள் கேட்கலாம். அன்று குர்ஆனையும் ஹதீஸையும் ஸஹாபாக்களிலிருந்து பிரித்துப் பார்க்கவில்லை. பிரித்துப் பார்க்க முடியாது. பிரித்து அவதூறு கூறியது பி.ஜே அவர்கள்தான்.

அதனால் இன்று தனது எழுத்துக்கும் பேச்சுக்கும்; அவர் முரண்பட்டு நிற்கின்றார். அப்படியானால் அன்று குர்ஆன் ஹதீசைப் புரிந்து கொள்வதற்கு ஸலஃபுஸ்ஸாலிஹீன்களின் விளக்கம் அவசியம் என்று வலியுறுத்திப் பேசிய சில வருடங்கள் ஏகத்துவ வாதிகளுக்குச் செய்த மோசடிதானே? ஒரு வாதத்துக்காக அவர் அந்த காலத்தில் தவறான கொள்கையில் இருந்தார் என்று வைத்துக் கொண்டால் ஆரம்பத்தில் வழிகேட்டை வைத்துக் கொண்டுதான் நாம் பிரச்சாரம் செய்தோமா? அடி தடி ஏச்சுப் பேச்சுக்களை சகித்துக் கொண்டோமா? அப்படியெனில் அவை அனைத்தும் பாழ்தானே? சமீபத்தில்தான் அவருக்கு தெளிவு கிடைத்தது என்றால்? குராஃபிகளுக்கு எதிராக அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் பாழ்தானே?

Mohammad Sheik:கேள்வி 5: ஒருவரின் மார்க்க விளக்கத்தை அறிந்து அந்தக் கருத்தில் உடன்பட்டு விட்டால், உடன்படும் நபர் மார்க்கவிளக்கமளிக்கும் நபரை தக்லீத் செய்பவர் என்றா கூற வருகிறீர்கள்?

Muhammed Aal Abdillah:  அவை குர்ஆனுக்கும் தெளிவான ஹதீஸ்களுக்கும் இஸ்லாமிய உம்மத்தின் ஏகோபித்த கருத்துக்களுக்கும் எதிராக இருந்தால் அதை தக்லீது என்றுதான் கூறுவேன். ஸக்காத் விஷயத்தில் ஸஹாபாக்களின் நடைமுறையை விட பி.ஜேயின் நிலைபாட்டை நீங்கள் பின்பற்றினால் அதை தக்லீது என்றுதான் கூறுவேன். மார்க்கத்தை ஸஹாபாக்கள் விளங்கியதை விட பி.ஜே விளங்கியது தான் சரி என்றால் அது தக்லீதாகத்தான் இருக்க முடியும். 

//பி.ஜேவைத் தவிர மற்ற உலமாக்கள் இந்த ஹதீசுக்கு என்ன பொருள் கொடுக்கின்றனர் என்பதையும், இந்த ஹதீசின் உண்மையான தாத்பரியம் என்ன என்பதையும் பதிகிறேன்//

//உங்களின் இதுகுறித்த பதிப்பு இன்னும் வரவில்லை.//

மார்க்கத்தை ஸஹாபாக்கள் விளங்குவதை விட பின்னவர்கள் நன்றாக விளங்குவார்கள் என்று இந்த ஹதீசுக்கு நீங்கள் (பி.ஜே கூறுவது போல) பொருள் வைத்தால், அதற்கு முரணாக சகாபாக்களின் அறிவுத் திறனையும் அவர்கள் மார்க்கத்தில் விளக்கம் பெற்றவர்கள் என்ற ரீதியில் வரும் ஹதீஸ்களையும் நீங்கள் மறுக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த ஹதீசுக்கான உண்மை விளக்கத்தை நான் பதியும் முன் உங்களிடம் ஒன்றை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்புகிறேன். ஸஹாபாக்கள் விளங்கியதை விட பின்னால் உள்ளவர்கள் மார்க்கத்தை விளங்க முடியும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.