திங்கள், 27 டிசம்பர், 2010

ஸலஃப் மன்ஹஜ் - விமர்சனங்களும் பதில்களும்! (1)

Salah K.Thangal: ஆக மொத்தம் கூட்டி க்கழித்தால், முன் சென்ற மூன்று தலைமுறையினர் தான் சலஃபுகள்! அவர்கள் குர் ஆன் மற்றும் ஹதீசை பின் பற்றி நடந்தார்கள். அதனால் தான் அவர்களை பின் பற்ற வேண்டும் என்ற உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது (வல்ல நாயன் அவர்களுக்கு நல்லருள் ......புரிவானாக) 

Muhammed Aal Abdillah: என்னுடைய கருத்து மட்டுமல்ல! நான் குறிப்பிட்டது போல ஆரம்ப கால சீர்திருத்தவாதிகள், இமாம்கள், சீர்திருத்த இயக்கங்கள் என்று மட்டுமல்ல! தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க கட்டத்தில் சகோ பி.ஜே அவர்கள் கூட குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதற்கு ஸலஃபுஸ்ஸாலிஹீன்களின் புரிந்துணர்தல் அவசியம் என்றும் அவர்கள் குர்ஆன் ஹதீசுக்குக் கொடுத்த விளக்கத்தை விட்டும் வெளியேறிச் சென்றதால்தான் வழிகேடு உருவானது என்று எழுதியும் பேசியும் பிரச்சாரம் செய்தும் வந்தார்கள்.பின்னர் அவரே ஸக்காத் விஷயத்தில் ஒரு நிலைபாட்டை எடுத்தபோது அது ஸஹாபாக்களின் நடைமுறைக்கு எதிராக வந்த போது ஸஹாபாக்களைப் பின்பற்றத் தேவையில்லை என்று கட்டுரை வெளியிட்டார். (ஸக்காத் சர்ச்சையை தயவு செய்து இபபோது கிளப்பி திசை திருப்பாமல் இருக்கவும்)நபித்தோழர்களின் இவரது நிலையை ஆரம்ப கால தவ்ஹீத் அறிஞர்கள் மறுத்தபோது அவர்கள் ஸஹாபாக்களை தக்லீது செய்யும் கொள்கை உடையவர்கள் என்றும் ஸலஃப் மன்ஹஜ் என்ற மூன்றாவது அடிப்படையை உருவாக்கியவர்கள் என்றும் அவதூறு சொல்லப்பட்டது என்பதே உண்மை.

ஸஹாபாக்களின் புரிந்துணர்தல் குர்ஆன் ஹதீசுக்கு உட்டபட்டது என்பதால்தான் ஸலஃப் மன்ஹஜ் என்பதை நம்முடைய அறிஞர்கள் எவரும் குர்ஆன் ஹதீஸிலிருந்து பிரித்துப் பார்க்கவில்லை. ஏனெனில் அவ்வாறு பிரித்துப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. அத்துடன் அவர்களைப் பின்பற்றுதல் குறித்த குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் இந்த உண்மைக்கு தெளிவான சான்றுகளாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

ஆக ஸலஃப் மன்ஹஜ் என்பது அல்லாஹ் பின்பற்றுவதில் என்ன வரைமுறைகளை வைத்துள்ளானோ அதன் அடிப்படையிலானது என்பது புரிகிறதா? (பின்பற்றுவதில் உள்ள வரைமுறைகள் என்ன? என்பது தனிக்கட்டுரையாக இன்ஷா அல்லாஹ் விளக்கப்படும்) ஆனால் பின்னாளில் தங்களுடைய புதிய நிலைபாடுகள் அந்த ஸலஃபுகளின் புரிந்துணர்தலுக்கும், விளக்கங்களுக்கும் எதிராக அமைந்தபோது இந்த புதிய விளக்கங்களை மறுத்தவர்களை நோக்கித்தான் இவர்கள் மூன்றாவது அடிப்படையை உருவாக்கியவர்கள் என்று புழுதி வாரித்தூற்றப்பட்டது என்பதை உள்ளார்ந்த வேதனையுடன் நினைவுகூருகிறேன்.  நம்மில் எத்தனை சகோதரர்கள் மோசமாக புழுதிவாரித்தூற்றியதை நான் அறிவேன். முஜாஹிதுகளுக்கு சாபம் என்று நோட்டீஸ் இட்டார்கள். அவர்கள் பணத்துக்காகப் பிரிந்தார்கள் என்று, அவர்களுக்கு தாவாவே இப்ப கிடையாது என்று அவதூறு சொல்லப்பட்டது. ஜாக் மீது சொல்லாத அவதூறுகளா? அஹ்ல ஹதீசை விட்டு வைத்தார்களா? என் சங்கைக்குரிய இப்னு பாஸ்(ரஹ்) அவர்களை விட்டார்களா? சரி அவதூறு கூறினார்களே? அவதூறு கூறப்பட்டவர்கள் எந்த விஷயத்தில் குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமாக ஸஹாபாக்களைப் பின்பற்றினார்கள் என்று ஆதாரம் கூறினார்களாஅதுவும் இல்லை. ஸலஃப் மன்ஹஜ் மூன்றாவது அடிப்படை என்று வாதிட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக வரும்போது மட்டும் அந்த ஸஹாபாக்களை எடுத்துக்கொள்வது ஏன்? நான் கேட்கிறேன், நபி (ஸல்) அவர்கள் தங்கள் தாடியை வெட்டினார்கள் என்று ஒரு ஆதாரத்தைத் தரச்சொல்லுங்கள். மாறாக இப்னு உமர் (ரழி) என்ற ஸஹாபியின் நடைமுறையைத்தானே ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அதுவும் இப்னு உமர் ஒரு பிடியை வெட்டினார்கள் என்று இருக்கும் போது இவர்களின் தாடி கையால் பிடிக்கும் அளவுக்குக் கூட இல்லையே?

ஆக அருமைச் சகோதரர் அவர்களே! மன்ஹஜ் ஸலஃப் என்பது மூன்றாவது அடிப்படை என்பதும் ஸஹாபாக்களை தக்லீது செய்கிறார்கள் என்பதும் வெறும் ஒரு அவதூறு மட்டுமே! இல்லையென்று நீங்கள் மறுத்தால் இதே வாதத்தை ஏன் இதை விட அதிகமாக சகோ.பி.ஜே அவர்களே செய்துள்ளார்கள். அதுவும் அவர் குராஃபியாக இருந்த காலத்தில் அல்ல! அனல் பறக்கும் தவ்ஹீத் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது. அப்படியானால் அவர் நம்மை ஏமாற்றினாரா? (அவருடைய பாணியில்) ஒரு மூன்றாவது அடிப்படையை பிரச்சாரம் செய்து விட்டு இன்று அதை மறுத்துப் பேசுதல் என்பது ஏமாற்றுவது தானே?

இன்ஷா அல்லாஹ் ஸலஃப் மன்ஹஜும் தவறான புரிதல்களும் என்ற கட்டுரையின் இரண்டாம் பகுதியை விரைவில் பதிகிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.