ஞாயிறு, 30 ஜனவரி, 2011

தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சி! அன்றும் இன்றும்!

தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சி! அன்றும் இன்றும்!

Mohammed Sheik: சகோ. முஹம்மது அபூபக்க்ர் ஆலு அப்தில்லாஹ்விற்க்கான பதில் 1

பதில்: ங்கே பிரச்சினையில்  மூலக் கருவிலிருந்து திசை திருப்ப முதலில் யார் பிரச்சாரம் செய்தார், நானா நீயா? என்ற அடிப்படையில் வேறு திசைக்குக் கொண்டு செல்ல முயற்சி நடைபெற்றிருக்கிறது. தமிழகத்தில் தஹ்ஹீத் பிரச்சாரகர்களில் ஒருவராக இருந்த சகோ. பி.ஜே காலப் போக்கில் உண்மையான கொள்கையில் இருந்து தடம் புரண்டவர்!  இன்று அவரும் அவர் காலப்போக்கில் கண்ட இயக்கங்களுடன் சஞ்சரித்து இன்று ததஜ என்ற இயக்கத்தில் இருப்பவர்களும் ஆரம்ப காலத்தில் எந்த ஒரு கொள்கையில் ஏகத்துவம் பிரச்சாரம் செய்யப்பட்டதோ அந்த கொள்கையிலிருந்து தடம் புரண்டு சென்றார்கள் என்பதற்காகவே ஏகத்துவப் பிரச்சாரத்தைப் பற்றிய சில வராலற்றுச் செய்திகளைப் பதிந்தேன். அவற்றை இருட்டடிப்பு என்று கூறி கருத்துப் பதிவு செய்துள்ளார் சகோ. முஹம்மது ஷேக்!

ஒரு வாதத்திற்காக சகோ. பி.ஜே வுக்கு ஞானோதயம் வந்து பிரச்சாரத்தைத் துவங்கினார் என்று வைத்துக் கொள்வோம்! இன்று அவர் அதே தூய்மையான கொள்கையில் இருக்கிறாரா? இல்லையா? இதுதான் இங்கே பிரச்சினைக்குரிய மூலக் கரு! காலப்போக்கில் அவரிடத்தில் கொள்கையளவில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பது தான் நம் நிலைபாடு.

ஆரம்பத்தில் என்ன ஒரு கொள்கையை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தாரோ அதற்கு முற்றிலும் முரண்பட்ட கொள்கையை இன்று அவர் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் என்ன அவர் பேசினாரோ இன்று அதற்கு முரணாகப் பேசிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் எந்த நம்பிக்கையை மக்களிடத்தில் எடுத்து வைத்தாரோ இன்று அதைத் தவறு என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய ஆரம்ப நிலைபாடு தவறு என்று சகோதரர் கூறுவாரேயானால் (ஏற்கெனவே கூறியிருக்கிறார்) அவர் இப்போதுதான் யாரும் துவங்காத புதிய பிரச்சாரத்தைத் துவங்கினார் என்று கூற வேண்டி வரும். ஆக அவர்தான் ஆரம்பத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் செய்தவர் என்பதும் இங்கே தவிடுபொடியாகிறது.


//தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சி பெற்ற வரலாற்றை நீங்கள் இருட்டடிப்பு செய்துள்ளீர்கள் அல்லது அறியாமல் எழுதியுள்ளீர்கள் என்றே நான் சொல்வேன்//

ஒரு வரலாறு - அதன் பின்னணியை முழுமையாகத் தெரியாமல் எதிர் கருத்து உள்ளவனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக வாயில் வந்ததையெல்லாம் எழுத்தாகப் பதிவு செய்து வைத்துள்ளீர்கள். தமிழகத்தில் கொள்கைப் பிரச்சாரம் துவங்கப்பட்டதைப் பற்றிய சிறிய செய்தியை நான் தந்திருந்தேன். அதற்கு பதிலாக யாரிடமோ கேட்டு வந்த செவிவழிச் செய்தியை, ஒரு சார்பு செய்தியைப் பதித்து விட்டு அதற்கு முத்தாய்ப்பாக நான் இருட்டடிப்பு செய்தேன் என்று வலிந்து கூறியுள்ளீர்கள். சகோதரரே! தமிழகத்தின் ஏகத்துவ வரலாற்றை 1980 லிருந்து துவங்கியது என்று யாரிடமோ கேட்ட செய்தியைப் பதித்து வைத்திருக்கும் நீங்கள் இந்த உலகத்தில் நீங்கள் குழந்தையாகப் பிறப்பதற்கு முன்னரே கமாலுத்தீன் மதனி அவர்கள் 1970 களில் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் துவங்கிவிட்டார் என்பதை அறிவீர்களா? அன்று எஸ்கே போன்றவர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது நீங்கள் குறிப்பிட்ட பெரியவர் பி.ஜே அவர்கள் நாத்திகக் கொள்கையில் இருந்தவர் என்பதை அறிவீரா? தெரியாது எனில் பழய கால ஏகத்துவவாதிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அதை விடுத்து யாரையோ தூக்கி நிறுத்த முயன்று எதைஎதையோ எழுதி வைக்காதீர்கள்.

ஸலஃப் மன்ஹஜ் என்பது என்ன? அது எப்படி தவறாக சித்தரிக்கப்படுகிறது? ஆரம்ப காலத்தில் இந்த கொள்கையின் நிலை என்ன? இப்போது எந்த விதத்தில் இது பயன்படுத்தப்படுகிறது? என்பதையெல்லாம் தனிக் கட்டுரையில் என்னால் இயன்ற அளவுக்கு நான் எடுத்துக் கூறிய பின்னரும் மீண்டும் மீண்டும் புரியாதது போல ஸலஃப் மன்ஹஜ் தான் ஜாக்கின் கொள்கை என்று அறிவிக்கத் தயாரா? என்று சிறுபிள்ளைத் தனமான ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார்(?!)

இப்படிக் கேள்வி கேட்பவர்   இதுவிஷயத்தில் கூட ஒரு தெளிவு ஏற்படாமல் இங்குமங்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. ஸலஃப் மன்ஹஜ், ஆரம்ப கால தவ்ஹீத் வரலாறு, பி.ஜேயின் கொள்கை மாற்றம் போன்றவற்றில் தெளிவான கருத்து இல்லாமல் சகோதரர் ஊசலாடிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அவரது எழுத்துக்களே சாட்சியாக உள்ளது.

// ஒருவர் ஆரம்பத்தில் ஒரு கொள்கையில் இருந்திருக்கலாம், பின்னர் அவருக்கு தெளிவுக் கிடைத்தால் அந்தக் கொள்கையை தவறு என்று பிரச்சாரம் செய்வது தவறா?//

என்று கேட்டு ஆரம்பத்தில் ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்ற பி.ஜேயின் நிலைபாட்டுக்கு நியாயம் கற்பித்தவர்  //சகோ.பீஜே அல்ஜன்னத் இதழில் அவ்வாறு எழுதியதற்கான ஆதாரத்தை கொஞ்சம் தர முடியுமா?//  என்று சொன்னதற்கே முரண்பட்டு தானும் குழம்பி இதைப் படிக்கும் ஆதரவாளர்களையும் குழப்பி வருகிறார்.

// சகோதரர் பீஜே அரம்பத்தில் சலஃப் மின்ஹ்ஜை பின்பற்றுங்கள் என்று கூறி பின்னர் தெளிவுபெற்ற பின்னரும், அய்யோ மக்களிடம் இவ்வாறு கூறீவிட்டோமே இப்போ மாற்றி சொல்லவேண்டீருக்கே என்று உலக மக்களுக்கு பயந்து சொல்லாமல்இருந்தால் அது மோசடியா? அல்லது அல்லாஹ்வுக்கு பயந்து மக்களை தெளிவுபடுத்துவதுமோசடியா?//

//மார்க்கத்தில் ஆய்வு மேற்கொண்டு பின்பற்றுவது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன கூறியுள்ளார்கள்? ஆய்வு சரி என்றால் இரண்டு கூலி, ஆய்வு தவறு என்றால் ஒரு கூலி// என்று ஆரம்பத்தில் ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்ற சகோ.பி.ஜேயின் நிலைபாட்டை ஓர் ஆய்வுப்பிழையாகச் சித்தரித்து நியாயப் படுத்தியவர் பின்னர்  அன்று முதல் இன்று வரை ஒரே கருத்தில் அவர் நிலைகொண்டுள்ளதாகவும் புதிய கருத்துக்கு மாறவில்லை என்றும் அவருக்கு ஆதரவாக எழுதியுள்ளார்.

இன்னும் சகோ.பி.ஜேயின் பழய நிலைபாடுகள், அவரது பிரச்சாரங்கள், ஆரம்ப காலப் பிரச்சார வரலாறு என்பதைப் பற்றி சகோதரர் அறியாமலேயே உள்ளார் என்பது அவர் இது குறித்து கேட்டுள்ள கேள்விகளிலேயே தெளிவாகத் தெரிகிறது.

இவர் என்னிடம் கேட்டது: //நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சகோ.பீஜே அவர்களின் அந்த உரை எப்போது பேசப்பட்டது, எங்கே பேசப்பட்டது? அதன் முழு நீள உரையும் அனுப்பித் தரவும், அல்லது அது எங்கே கிடைக்கும் என்பதை சொல்லவும் இன்ஷா அல்லாஹ் நான் பெற்றுக்கொள்கிறேன்//

சகோ.பி.தாஸீம் இடத்தில் இவர் கேட்டிருப்பது: // ஆரம்பக்கட்டத்திலே சகோ.பீஜே பேசிய உரைகள் இப்போது கைவசம் என்னிடம் இல்லை. துபை இஸ்லாமிய அழைப்பு மைய தொடர்பு தகவல்களும் இல்லை//  //உங்களிடம் அந்த கேசட் இருந்தால் எனக்கு ஒன்றை அனுப்பித் தருமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த கேசட்டை எனது தம்பி வசமோ அல்லது சகோ. ஹாஜா நூஹ் வசமோ நீங்கள் ஒப்படைத்தால் அது இன்ஷா அல்லாஹ் என்னை வந்தடையும்.// 

இதிலிருந்தே தெரிகிறது ஆரம்ப கால வரலாறுகள், சகோ.பி.ஜேயின் நிலைபாடு என்பதைப் பற்றி இவர் எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார் என்பது.

சகோ.பி.ஜே அவர்களின் சில பிரச்சாரச் செயல்பாடுகளை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனை நான் மறுக்கவில்லை. ஆனாலும் அதற்கு அவர் மட்டும் சொந்தக் காரர் கிடையாது. அவருக்குக் களம் அமைத்துக் கொடுத்தவர்கள், அவரைக் களத்தில் கொண்டு வந்தவர்கள் என அனைவரையும் அவர் இன்று தடம் புரண்டவர்கள் என்று கூறி தன்னுடைய தடம் புரளலை நியாயப்படுத்துவது தான் வேடிக்கையும் வேதனைக்கும் உரியது.

//ஏகத்துவத்துக்காக சகோ.எஸ்.கே அவர்கள் கோட்டாறிலே அடி, உதை எல்லாம் வாங்கியுள்ளார் அததகைய அவரது தியாகத்தை நாங்கள் மதிக்கிறோம்//

நயவஞ்சகத் தனமான உங்களின் இந்த மதித்தலை எம் கண்ணியத்துக்குரிய தலைவர் எஸ்கே அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அல்லாஹ்விடத்தில் உள்ள உயர்ந்த மதிப்பையே அவர் விரும்புகிறார். ஜாக் பின்பற்றுவது யூதரையா? அல்லது தூதரையா? கர்வத்தின் மறுபெயர் கமாலுத்தீன்!  கணக்கு மனைவியிடம் இருக்கிறது என்று சொன்னார்! என்பது போன்ற உங்களது சேறுவாரித் தூற்றுதல்களுக்கு இடையே உள்ள உங்களின் இது போன்ற பசப்பு வார்த்தைகள் எமக்குத் தேவையில்லை.

//இந்த பிரச்சனையை தனியாக அணுகுவோம். இதில் உங்கள் கருத்து தவறானது எனில் தவறான கருத்தைத் தந்த ஜாக்கை விட்டு விலகத் தயாரா..//

என்ன ஓர் அற்புதமான வேண்டுகோள்!  அறிந்து கொள் சகோதரனே!  ஜாக்கிலிருந்து தவறான தகவலை நான் பெற்றுக்கொள்ளவும் இல்லை! அப்படித் தந்தாலும் அந்த தவறான தகவலை மட்டும் ஏற்றுக் கொள்ளமாட்டேனே தவிர அற்பக் காரணங்களுக்காகவெல்லாம் இயக்கத்தை விட்டு வெளியேறும் குறுகிய எண்ணம் படைத்தவனல்ல நான்.   குறுகிய சிந்தனை உடைய ததஜ பாசறையில் பயின்றவன் அல்ல நான்!  அல்லாஹ்வுக்கு இணை வைக்காத வரை, தொழுகையை நிலை நாட்டும் காலம் வரை தலைமைக்கு மாறு செய்தல் கூடாது, பிரிந்து செல்லக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவன். என்போன்றவர்களை ஜாக்கிலிருந்து வெளியேற்றும் உங்களின் கனவை விட்டுவிடுங்கள்.

இறுதியாக சகோதரர் அவர்களின் கவனத்துக்கு சில விஷயங்களைக் கொண்டு வருகின்றேன்.

· தமிழகத்தில் ஏகத்துவ வரலாற்றை ஒரேயொரு தனி மனிதருடன் மட்டும் இணைத்துக் கூறுவது ஓர் அநீதியாகும்.

· சகோ.பி.ஜே ஆரம்ப காலத்தில் உள்ள அந்த தூய கொள்கையில் இருந்து தடம் புரண்டுவிட்டார்.  அல்லாஹ் அவருக்கு ஹிதாயத்தைக் கொடுப்பானாக!

· சகோ பி.ஜே அவர்கள் பிரச்சாரக் களத்தில் வருவதற்கு முன்னரேயே ஏகத்துவக் கொள்கை தமிழகத்தில் துளிர் விட்டிருந்தது. கமாலுத்தீன் மதனி, இக்பால் மதனீ, ரஹ்மதுல்லா இம்தாதி போன்றோர் அதன் முன்னோடிகள் ஆவர்.

· பி.ஜே என்ற தனிமனிதரை இந்தப் பிரச்சாரக் களத்தில் அறிவதற்கு முன்னரே என்னைப் போன்றவர்கள் கமாலுத்தீன் மதனி அவர்கள் மொழியாக்கம் செய்து தமிழுலகுக்குத் தந்த, ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் தவ்ஹீதின் எதிர்ப்புக்குத் தக்க பதில்கள், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவின் இறைநேசச் செல்வர்களும் ஷைத்தானின் தோழர்களும், வசீலாவின் சட்டங்கள், மூதறிஞர் இப்னு பாஸ் அவர்களின் புத்தகங்கள் மூலம் தவ்ஹீதைப் பற்றித் தெரிந்து கொண்டோம்.

· தமிழகத்திலிருந்து வெளிநாட்டில் வேலைக்குச் சென்றிருந்த  ஏராளமான ஆரம்ப கால சகோதரர்களும் பி.ஜேயின் பிரச்சாரத்துக்கு முன்னரே வெளிநாட்டு அழைப்பு மையங்கள் வாயிலாக சத்தியத்தை அறிந்து கொண்டு வந்து ஊரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

· பி.ஜே பிரபலம் ஆவதற்கு முன்னரேயே இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் காரணமாக அடித்து உதைக்கப்பட்ட நிறை சகோதரர்களை நான் அறிவேன். 

சத்தியத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நான் எழுதியவற்றில் உங்களை எதுவும் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.   உண்மையை அலசி ஆராய்ந்து நடுநிலையாகச் சிந்தித்து செயல்படுமாறு வேண்டிக் கொள்கிறேன். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக.

இதைப் படிப்பவர்கள் பின்வரும் இணைப்புகளையும் பார்வையிடுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.