திங்கள், 27 டிசம்பர், 2010

ஸலஃப் மன்ஹஜ் - விமர்சனங்களும் பதில்களும்! (2

Salah K.Thangal :  ஆக இங்கே சலஃபுகள் பற்றிய குழப்பம் ஓரளவுக்கு தீர்ந்தாலும் என் சிற்றறிவுக்கு நேரடியாக குர் ஆன் ஹதீசை பின் பற்றுவதே நல்ம் தரும் படிப்பினை என ப்படுகிறது. சிறப்புக்குரிய சமூகம் எனும் அந்த சகாபாக்கள் பின் பற்றிய அதே இறை வரிகளையும் தூதர் மொழிகளையும் பின் பற்றி வாழும் நன் மக்களாக என்னையும் உங்களையும் வல்ல நாயன் அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்!


Muhammed Aal Abdillah: அல்ஹம்துலில்லாஹ்! ஒரு சகோதரருக்கேனும் குழப்பம் தீர்ந்து விட்டதில் அல்லாஹ்வைப் புகழ்கிறேன். நிச்சயமாக அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவன் நேர்வழி காட்டவே செய்வான். //என் சிற்றறிவுக்கு நேரடியாக குர் ஆன் ஹதீசை பின் பற்றுவதே நல்ம் தரும் படிப்பினை என ப்படுகிறது// நேரடியாகப் பின்பற்றுதல் கூட ஸஹாபாக்கள் குறுக்கே இல்லாமல் முடியாது! காரணம் ஸஹாபாக்கள்தான் வஹீக்கு சாட்சி வகித்தார்கள். அவர்கள்தான் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். அவர்களிடமிருந்து தான் நாம் ஹதீஸைப் பெற்றுக் கொண்டோம்.

இன்னும் சொல்லப் போனால் அவர்களைப் பின்பற்றக் கூடாது என்று குர்ஆன் சொல்லவில்லை. மாறாக அவர்களை அழகிய முறையில் பின்பற்றுவதற்கு வலியுறுத்துகிறது. நபி (ஸல்) அவர்களின் பல பொன்மொழிகளும் இதற்கு ஆதாரமாக உள்ளது. உதாரணமாக ஒன்றுதான் 73 கூட்டம் குறித்த ஹதீஸ். இதனால்தான் சுன்னத் வல்ஜமாஅத் யார் என்று விளக்கும் போது அன்று அனல் பிறக்கும் ஏகத்துவப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சகோ.பி.ஜே கூட ஸஹாபாக்களைப் பின்பற்றுதலின் அவசியம் குறித்துப் பேசினார். இதனால் தான் அன்று பிரச்சாரம் செய்தபோது ஸலஃபுஸ்ஸாலிஹீன்களின் விளக்கத்தை விட்டும் வெளியேறிச்சொல்வது வழிகேடு என்று பேசினார். 

ஆனால் பிற்காலத்தில் ஸக்காத் விஷயத்தில் புதிய நிலைபாடு எடுத்த போது அது ஸஹாபாக்களின் நடைமுறைக்கு மாற்றமாக இருந்ததால் ஸஹாபாக்களைப் பின்பற்றத் தேவையில்லை என்று வாதிட்டார். அதற்கு மறுப்பளித்தவர்களை தக்லீதுவாதிகள் என்று அவதூறு கூறினார். 

ஒரு உதாரணம்: குர்ஆனை விளங்க ஸலஃபுகளின் புரிதல்கள் அவசியம் இல்லை என்று வாதிடுவதால்தான் காதியானிகள் காதமுன்னபி என்பதற்கு வேறு விளக்கம் அளிக்கின்றனர். ஆகிறத் என்பதற்கு மிர்சா குலாமின் வஹீ என்று விளக்கமளிக்கின்றனர். அப்போது நாம் என்ன சொல்வோம்? இந்த வசனத்திற்கு நபி(ஸல்) அவர்களிடமிருந்து பாடம் பெற்ற ஸஹாபாக்கள் என்ன விளக்கமளித்தார்கள்? அவர்களிடமிருந்து பாடம் பெற்ற தாபிஈன்கள் என்ன விளக்கமளித்தார்கள.? என்று. அல்லாஹ் உங்களுக்கு மேலும் தெளிவைத் தர துஆ செய்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.