வெள்ளி, 14 ஜூன், 2013

தமிழக தயாரிப்பு சவூதியில் செல்லுபடியாகுமா?

சூனியம் பற்றி வந்துள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை 14 நூற்றாண்டுகளாக இஸ்லாமிய சமுதாயம் நம்பி வருகின்றது. ஆனால் அப்படி நம்புவது இணைவைப்பு என்ற ஒரு புதிய கொள்கையை தமிழகத்தில் பி.ஜே உருவாக்கி பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது ஆதரவாளர்களும் அவர் கொள்கையைப் பின்பற்றி பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

இந்த நேரத்தில் சூனியம் பற்றிய ஹதீசை நம்பி வரும் மக்கா இமாமுக்குப் பின்னால் தொழலாமா? என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளித்த பி.ஜே "நமது ஆய்வுகள் அரபியில் அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டு அவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறி பின்னரும் அந்த ஹதீஸ்களை நம்பினால் அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது" என்று சொல்கிறார்.


ஒரு கொள்கையை சொல்லக் கூடியவர் தன் கொள்கையில் தூய்மையாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? தான் உண்மை என்று நம்பும் அந்த கொள்கையை தூய எண்ணத்துடன் பிரச்சாரம் செய்ய முற்பட வேண்டும். தம் ஆய்வு அரபியில் சவூதியில் எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்று கூறியவர் அதற்காக செய்த முயற்சிகள் என்னென்ன? 


சமீபத்தில் இவர் உம்ரா செல்லும் ஒரு வாய்ப்பைப் பெற்றார். சவூதி உலமாக்களை சந்தித்து தன் ஆய்வை சமர்ப்பிக்க ஓர் அருமையான வாய்ப்பு! சந்தித்தாரா? தன் ஆய்வை சமர்ப்பித்தாரா? சவூதி உலமாக்கள் திணறி பதில் சொல்ல முடியாமால் போனார்களா? இவரது ஆய்வை உண்மை என ஏற்றுக் கொண்டார்களா? இனி அவர்களின் பின்னால் நின்று தொழலாமா? இவர் அவர்களின் பின்னால் தொழுதாரா? தனியாகத் தொழுதாரா? இந்த நிகழ் கீற்று அதை விளக்குகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.