வெள்ளி, 4 மே, 2012

இப்னு அப்பாஸ் குறித்து யார் சொல்வது உண்மை?

இப்னு அப்பாஸ் குறித்து யார் சொல்வது உண்மை?

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நேரடி தர்பியாவில் வளர்க்கப்பட்டவர்கள்.  "யா அல்லாஹ் இவருக்கு  மார்க்கத்தில் ஞானத்தைக் கற்றுக்கொடு" என்று நபி (ஸல்) அவர்களால் சிறப்பாக துஆ செய்யப்பட்டவர்கள். (புகாரி: 3756)  குர்ஆனில் அவர்கள் பெற்ற ஞானத்தின் காரணமாக  உமர் (ரழி) போன்ற மூத்த ஸஹாபாக்களால் கூட முன்னிலைப் படுத்தப்பட்டவர் (புகாரி 4970)  குர்ஆன் தஃப்ஸீரில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் விளக்கத்தை முன்னிலைப் படுத்துகிறது முஸ்லிம் சமுதாயம். ஆம் அல்லாஹ்வின் தூதரால் சான்று வழங்கப்பட்டவர் அல்லவா? ஆனால் அந்தோ பரிதாபம்! ஸஹாபாக்கள் விமர்சனப்பட்டியலில் அவரும் விடுபடவில்லை.

நமக்கு குர்ஆனை ஸஹாபாக்கள்தான் தொகுத்துக் கொடுத்தார்கள். அவர்கள் எதைக் குர்ஆன் என்று தந்தார்களோ அதைத்தான் இன்றும் நாம் குர்ஆனாக வைத்திருக்கிறோம். குர்அனில் எழுத்துப் பிழைகள் என்று வேண்டாத விவாதம் செய்யத் துணிந்தவர்கள் அந்த ஸஹாபாக்களே அதைப் பிழையாக ஓதியுள்ளனர், ஓதச் சொல்லியுள்ளனர் என்று துணிந்து பிரச்சாரம் செய்யும் இந்த வீடியோ காட்சி வேதனை கொள்ளச் செய்கிறது. கண்மூடிப் பின்பற்றும் தமிழ் முஸ்லிம் சமுதாயம் சற்றேனும் சிந்தனை செய்யுமா?

இப்னு அப்பாஸ் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துஆ செய்தது உண்மையா? அவர்களின் குர்ஆனியக் கல்வி குறித்து உமர் (ரழி) மற்றும் மூத்த ஸஹாபாக்களின் நிலைபாடு உண்மையா? அல்லது இந்த நூற்றாண்டில் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் மூதறிஞர் பி.ஜே சொல்வது உண்மையா? நீங்களே முடிவ செய்யுங்கள்.

இப்னு அப்பாஸ் அவர்கள் விமர்சிக்கப்படும் வீடியோ ஒரு சாம்பிள் மட்டும். விரிவா இன்ஷா அல்லாஹ் விரைவில்...

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.