திங்கள், 31 ஜனவரி, 2011

மவ்லவி.பி.ஜே அவர்களின் கொள்கை மாற்றம் - ஓர் எளிய உரையாடல்!

Mohammad Sheik:கேள்வி 4: சகோ.பீஜே ஜாக் எனும் அமைப்பில் இருக்கும் போது சலஃப் மன்ஹஜை பின்பற்றுவது தான் சரி என்று அல்ஜன்னத் மாத இதழில் எழுதி வந்தாரா அல்லது குர்ஆனும் நபிமொழியிம் மட்டுமே பின்பற்றத் தகுதியானவை என்று எழுதி வந்தாரா? (பழைய அல்ஜன்னத்தின் கடைசிப் பக்கத்தில் சபதம் ஏற்போம்என்று வரும் அதிலே என்ன சொல்லப்பட்டிருந்தது?

Muhammed Aal Abdillah:  இந்தக் கேள்விக்கும் என்னுடைய பதிவில் விளக்கியிருக்கிறேன் சகோதரரே! இருந்தாலும் உங்களுக்காக சுருக்கமாகப் பதிகிறேன். அல்ஜன்னத்தில் மட்டுமல்ல! அந்நஜாத், புரட்சிமின்னல் போன்ற இதழ்களில் கூட அவர் எழுதியதும் பேசியதும் உண்டு. அதுவும் ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டே பேசியிருக்கிறார். குர்ஆனையும் நபிவழியையும் ஜமாஅத்துஸ்ஸஹாபாவையும் பின்பற்றுவதுதான் உண்மையான அஹ்லுஸ்சுன்னத் வல்ஜமாஅத் என்று ஹதீசை ஆதாரம் காட்டிப் பேசியதும் அவர்தான்.

அப்படியானால் சபதம் ஏற்போம் என்று அல்ஜன்னத்தில் எழுதப்பட்டது ஏன்? என்று நீங்கள் கேட்கலாம். அன்று குர்ஆனையும் ஹதீஸையும் ஸஹாபாக்களிலிருந்து பிரித்துப் பார்க்கவில்லை. பிரித்துப் பார்க்க முடியாது. பிரித்து அவதூறு கூறியது பி.ஜே அவர்கள்தான்.

அதனால் இன்று தனது எழுத்துக்கும் பேச்சுக்கும்; அவர் முரண்பட்டு நிற்கின்றார். அப்படியானால் அன்று குர்ஆன் ஹதீசைப் புரிந்து கொள்வதற்கு ஸலஃபுஸ்ஸாலிஹீன்களின் விளக்கம் அவசியம் என்று வலியுறுத்திப் பேசிய சில வருடங்கள் ஏகத்துவ வாதிகளுக்குச் செய்த மோசடிதானே? ஒரு வாதத்துக்காக அவர் அந்த காலத்தில் தவறான கொள்கையில் இருந்தார் என்று வைத்துக் கொண்டால் ஆரம்பத்தில் வழிகேட்டை வைத்துக் கொண்டுதான் நாம் பிரச்சாரம் செய்தோமா? அடி தடி ஏச்சுப் பேச்சுக்களை சகித்துக் கொண்டோமா? அப்படியெனில் அவை அனைத்தும் பாழ்தானே? சமீபத்தில்தான் அவருக்கு தெளிவு கிடைத்தது என்றால்? குராஃபிகளுக்கு எதிராக அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் பாழ்தானே?


Mohammad Sheik: சகோ.பீஜே அல்ஜன்னத் இதழில் அவ்வாறு எழுதியதற்கான ஆதாரத்தை கொஞ்சம் தர முடியுமா?

Muhammed Aal Abdillah:  அல்ஜன்னத் மட்டுமல்ல - பல இடங்களிலிருந்தும் தருகிறேன். தந்தால்....

1. அவருக்கு ஆரம்ப காலத்திலிருந்துள்ள நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதையும்
...
2.
ஸலஃப் மன்ஹஜ் என்பது இப்போது தான் ஜாக் உருவாக்கிக் கொண்டது என்உங்களின் வாதம் தவறு என்பதையும்


3.
இருபது வருடமாக நாங்கள் இதைத்தான் சொல்லி வருகிறோம் என்று நீங்கள் ஏகத்துவத்தில் எழுதியது பொய்த்தகவல் என்பதையும்  தாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரா?

Mohammad Sheik: சகோதரர் பீஜே அரம்பத்தில் சலஃப் மின்ஹ்ஜை பின்பற்றுங்கள் என்று கூறி பின்னர் தெளிவுபெற்ற பின்னரும், அய்யோ மக்களிடம் இவ்வாறு கூறீவிட்டோமே இப்போ மாற்றி சொல்லவேண்டீருக்கே என்று உலக மக்களுக்கு பயந்து சொல்லாமல்இருந்தால் அது மோசடியா? அல்லது அல்லாஹ்வுக்கு பயந்து மக்களை தெளிவுபடுத்துவதுமோசடியா?

Muhammed Aal Abdillah:  அவ்வாறெனில் 20 வருடமாக நாங்கள் இதைத்தான் கூறி வருகிறோம் என்பது பொய்தானே?
இன்னும் உங்களுடைய இந்த வாதமே //ஜாக்கின் நிலையில் தான் 2005 அக்டோபரில் மாற்றம் ஏற்பட்டதே தவிர சகோ.பீஜேவின் நிலையில் அல்ல.// என்ற உங்கள் பதிவின் வாசகத்துக்கு முரணாக உள்ளதே?

Mohammad Sheik:  சகோதரரே! மார்க்கத்தின் அடிப்படையே என்ன? நிய்யத் தானே.

நல்ல எண்ணத்துடன் அப்பிரச்சாரம் மேற்கொண்டிருந்தால் அது எப்படி சகோதரரே பாழாகும்? அவர் அறிந்துக் கொண்டே அததவரை செய்திருந்தால், அது பாழ் தான்..

அவை பாழ் இல்லை என்பதற்க்கு இன்று தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஏகத்துவ எழுச்சியே சாட்சி. அல்ஹதுலில்லாஹ்!!

மார்க்கத்தில் ஆய்வு மேற்கொண்டு பின்பற்றுவது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன கூறியுள்ளார்கள்? ஆய்வு சரி என்றால் இரண்டு கூலி, ஆய்வு தவறு என்றால் ஒரு கூலி என்று.

இது எல்லாம் அறீந்துக் கொண்டே பாழ் என்று சொல்லாதீர்கள், ப்ளீஸ்.

Muhammed Aal Abdillah:  சிரிப்புதான் வருகிறது. உங்கள் வாதத்தை நிலைநாட்டுவதற்காக ஹதீஸ்களை ...உங்களுக்குத் தகுந்தாற்போல் பயன்படுத்தாதீர்கள். ஒரு வாதத்திற்காக இதை ஏற்றுக் கொண்டால் அவர் செய்வது ஆய்வு அல்ல. கொள்கை மாற்றம். ஆய்வுகள் குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் அதற்கு நேரடி சாட்சிகளான நபித்தோழர்களின் புரிதல்களுக்கும் உட்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் அது வழிகேடு! உங்களது கூற்றின்படி பார்த்தால் அஹ்லுல் குர்ஆன் என்ற ஹதீஸ் மறுப்பாளர்கள் செய்வதும் ஆய்வுதான்! காதியானிகள் செய்ததும் ஆய்வுதான்! எப்படிப்பட்ட ஆய்வு? தவறிவிட்ட ஆய்வல்ல - வழிதவறிய ஆய்வு. இதனால் தான் கவாரிஜ்களின் ஆய்வை ஏற்றுக் கொள்ளாமல் அவர்களைக் கொலை செய்ய அலீ(ரழி) கட்டளையிட்டார்கள்.

Mohammad Sheik: நல்ல எண்ணத்துடன் அப்பிரச்சாரம் மேற்கொண்டிருந்தால் அது எப்படி சகோதரரே பாழாகும்?

 Muhammed Aal Abdillah:  அவர் அப்படிச் செய்திருந்தால் கூலி கிடைக்கும். அதே சரியான கொள்கையில் நிலை நின்றிருந்தால். (உங்கள் வாதப்படிதான் பாழ் என்று குறிப்பிட்டேன்) ஆனால் இன்று அவர் இருப்பது சரியான கொள்கையில் அல்ல!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.